சிட்டிகா

Saturday 28 May 2011

கூந்தலுக்கு மசாஜ் செய்வது எப்படி?

தலையில் மசாஜ் செய்யும் போது நமக்கு இருக்கும் டென்ஷன், தலைவலி ஆகியவை சென்று மூளைக்கு ஒரு புத்துணர்வை தரும். நம் முகமும் பார்ப்பதற்கு தெளிவடைந்ததுபோல் காட்சிதரும். அதனால் நீங்களும் வீட்டில் இதை செய்து பாருங்கள்.





  • கூந்தலை வரிவரியாக் எடுத்து எண்ணெயை மயிர்க்கால்கள் தலை முழுவதும் பஞ்சைக் கொண்டு (காட்டன்) நன்றாக தடவ வேண்டும்.



  • கூந்தலை வரிவரியாக் எடுத்து எண்ணெயை மயிர்க்கால்கள் தலை முழுவதும் பஞ்சைக் கொண்டு (காட்டன்) நன்றாக தடவ வேண்டும்.



  • கப்பிங் முறையில் விரல்களை இணைத்து குவித்தவாறு லேசாக தலை முழுவதும் தட்டிவிட வேண்டும்.



  • டேப்பிங் முறையில் மெதுவாக தலை முழுவதும் தட்டிவிட வேண்டும். டேப் செய்வது இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்தாற்போல் வைத்து சுண்டு விரல்கள் பக்கமாக சேர்த்தாற்போல் வைத்து சுண்டு விரல்கள் பக்கமா உபயோகிக்க வேண்டும்


  • பின்ச்சிங் முறையில் விரல் நுனிகளைக் கொண்டு தலைமுழுவதும் மசாஜ் செய்ய வேண்டும். அதாவது விரல் நுனிகள மயிர்கால்களில் படும்படி வைத்து லேச்சாக கிள்ளுவது போல் செய்யவேண்டும்.


  • தலைமுடியை சிறிது சிறிதாக எடுத்து ஒரு விரலால் லேசாக சுற்றியது போல் வைத்துக் கொண்டு மெதுவாக இழுத்து விட வேண்டும். அவ்வாறு செய்தால் தலமுடி உறுதியாகும்.
    மேலே கூறப்பட்டுள்ள மசாஜ் முறைகள் 20 நிமிடங்கள் செய்ய வேண்டும்

                    மசாஜ் முடிந்தவுடன் ஆவி பிடித்தல் (Streaming) செய்ய வேண்டும். இதற்கு ஒரு பாத்திரத்தில் நீரைக் கொதிக்க வைத்து அதில் பெரிய துவாலை(டவல்) நனைத்து பொறுக்கும் அளவு சூட்டுடன் தலையைச் சுற்றிவிட வேண்டும். இதே போல் மூன்று அல்லது நான்கு முறை செய்ய வேண்டும்.



           ஆவி பிடித்தவுடன் பேக் போட்டால் மிகவும் நல்லது. பேக் என்றால் தலைக்கு போஷாக்கும், பொலிவும், முடி உதிர்வதை தடுக்கும் தன்மையைக் கொண்ட பொருட்களை உபயோகித்து பூசி ஊற வைத்தல்.  ஆவி பிடித்தவுடன் சீப்பினால் நன்றாக சீவி விட வேண்டும்

No comments:

Post a Comment