சிட்டிகா

Monday 30 May 2011

மனிதா.... உன்னை பற்றி...........





  1. மனிதனுக்கு கோடையில் ஞாபக சக்தி அதிகம்
  2. மனித உடலில் இரத்த ஓட்டம் இல்லாத பகுதி ‘கண்ணின் கருவிழி’
  3. மனிதனின் இரத்தம் 38 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்
  4. மனித உடலில் தசைப்பகுதி 40%
  5. மனித உடலி மிக நீளமான எலும்பு தொடை எலும்பு தான்.
  6. நமது மூளையில் உள்ள ஹைப்போதலாஸ் பகுதியே துக்கத்தை கட்டுபடுத்துகிறது.
  7. ஒரு துளி ரத்தம் மனித உடலை சுற்றிவர எடுத்துக் கொள்ளும் நேரம் இரண்டு வினாடிகள்
  8. மனிதன் உணவு இன்றி ஒரு மாதம் கூட உயிர் வாழ முடியும். ஆனால் தண்ணீர் இன்றி ஒரு வாரம் கூட உயிருடன் இருக்க முடியாது.
  9. ஆண்களை விட பெண்களுக்கு மோப்ப சக்தி அதிகம். ஏன்னெனில் “ஈஸ்டிரோஜன்” என்ற ஹார்மோன் நுகர்வு செல்கள் எப்போதும் புத்துண்ர்ச்சியுடன் இருக்கும்.
  10. மனித உடலுக்கு தேவையன் மொத்த ரத்தத்தின் அளவு 4.5 லிட்டர்.
  11. மனிதனின் தலையில் உள்ள மொத்த எலும்புகள் – 22
  12. மனிதனின் மூளையில் உள்ள மொத்த நரம்பு செல்கள் 1200 கோடி
  13. மனித உடம்பில் உள்ள கடினமான பாகம் எலும்பு
  14. மனிதன் நாக்கின் நீளம் 10 செ.மீ
  15. மனிதனின் உடம்பில் வலுவான தசை தொடை.
  16. மனிதனின் இதயத்திலிருந்து இரத்தத்தை வெளியே சொண்டு போகும் குழாய் தமனி
  17. நமது கண்ணுக்கு சொல்லும் ஒளியின் அளவை ஒழுங்குபடுத்துவது ’ஐரிஸ்’
  18. இதயத்தை அதிர்ச்சியில் இருந்து பாதுகாக்கும் திரவம் பெரிகார்டியம் திரவம்.
  19. ரத்தத்தில உள்ள ‘புரோலக்டின்’ என்ற சத்து தான் தாய்பால் சுரக்க உதவுகிறது.
  20. மனித நுரையீரலில் 15 லட்சம் அறைகள் உள்ளன.
  21. சராசரியாக ஒரு மனிதனின் உயரம் அதன் தலையின் நீளத்தைப் போல் 7 1/2 மடங்கு இருக்கும்.
  22. கருப்பையில் கருத்தரித்த்தும் முதலில் உற்பத்தியாகும் உறுப்பு இதயம்.
  23. குடல்புண் ஏற்படுவதற்கு காரணமான பாக்டீரியம்? ஹெலிக்கே பேக்ட்ர் பைலேரி
  24. சிறுகுடல் எவ்வளவு நீளமுடையது? 5 – 7 மீட்டர் நீளமுடையது.
  25. இரைப்பையில் Hcl அமிலத்தை சுரக்கும் செல் எது ? ஆக்ஸின் பிக் செல்
  26. இதயம் ஒருநாள் முழுவதும் 1,03,689 முறை துடிக்கின்றது.
  27. இரத்தம் உடலினுள் ஒருநாள் முழுவதும் 16,80,000 மைல்கள் சுற்றுகிறது.
  28. ஒரு நாள் முழுவதும் 438 கனஅடி காற்றை உள்ளே இழுக்கிறோம்.
  29. ஒரு நாள் முழுவதும் 3 1/2பவுண்டு எடை உணவை சாப்பிடுகிறோம்.
  30. ஒரு நாள் முழுவதும் 70,00,000 மூளை செல்களுக்கு வேலை கொடுக்கிறோம்.


Saturday 28 May 2011

கூந்தலுக்கு மசாஜ் செய்வது எப்படி?

தலையில் மசாஜ் செய்யும் போது நமக்கு இருக்கும் டென்ஷன், தலைவலி ஆகியவை சென்று மூளைக்கு ஒரு புத்துணர்வை தரும். நம் முகமும் பார்ப்பதற்கு தெளிவடைந்ததுபோல் காட்சிதரும். அதனால் நீங்களும் வீட்டில் இதை செய்து பாருங்கள்.





  • கூந்தலை வரிவரியாக் எடுத்து எண்ணெயை மயிர்க்கால்கள் தலை முழுவதும் பஞ்சைக் கொண்டு (காட்டன்) நன்றாக தடவ வேண்டும்.



  • கூந்தலை வரிவரியாக் எடுத்து எண்ணெயை மயிர்க்கால்கள் தலை முழுவதும் பஞ்சைக் கொண்டு (காட்டன்) நன்றாக தடவ வேண்டும்.



  • கப்பிங் முறையில் விரல்களை இணைத்து குவித்தவாறு லேசாக தலை முழுவதும் தட்டிவிட வேண்டும்.



  • டேப்பிங் முறையில் மெதுவாக தலை முழுவதும் தட்டிவிட வேண்டும். டேப் செய்வது இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்தாற்போல் வைத்து சுண்டு விரல்கள் பக்கமாக சேர்த்தாற்போல் வைத்து சுண்டு விரல்கள் பக்கமா உபயோகிக்க வேண்டும்


  • பின்ச்சிங் முறையில் விரல் நுனிகளைக் கொண்டு தலைமுழுவதும் மசாஜ் செய்ய வேண்டும். அதாவது விரல் நுனிகள மயிர்கால்களில் படும்படி வைத்து லேச்சாக கிள்ளுவது போல் செய்யவேண்டும்.


  • தலைமுடியை சிறிது சிறிதாக எடுத்து ஒரு விரலால் லேசாக சுற்றியது போல் வைத்துக் கொண்டு மெதுவாக இழுத்து விட வேண்டும். அவ்வாறு செய்தால் தலமுடி உறுதியாகும்.
    மேலே கூறப்பட்டுள்ள மசாஜ் முறைகள் 20 நிமிடங்கள் செய்ய வேண்டும்

                    மசாஜ் முடிந்தவுடன் ஆவி பிடித்தல் (Streaming) செய்ய வேண்டும். இதற்கு ஒரு பாத்திரத்தில் நீரைக் கொதிக்க வைத்து அதில் பெரிய துவாலை(டவல்) நனைத்து பொறுக்கும் அளவு சூட்டுடன் தலையைச் சுற்றிவிட வேண்டும். இதே போல் மூன்று அல்லது நான்கு முறை செய்ய வேண்டும்.



           ஆவி பிடித்தவுடன் பேக் போட்டால் மிகவும் நல்லது. பேக் என்றால் தலைக்கு போஷாக்கும், பொலிவும், முடி உதிர்வதை தடுக்கும் தன்மையைக் கொண்ட பொருட்களை உபயோகித்து பூசி ஊற வைத்தல்.  ஆவி பிடித்தவுடன் சீப்பினால் நன்றாக சீவி விட வேண்டும்

Friday 27 May 2011

முகத்தில் பேசியல் செய்வது எப்படி





பெண்கள் முகத்தில பேசியல் என்னும் மசாஜை செய்து கொள்ள நிறைய செலவு செய்கிறார்கள். ஒரு முறை செய்தால் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் பெண்களின் மத்தியில் இருக்கிறது. சிலரால் அடிக்கடி செய்ய முடியாது. வருத்தப்படாதீங்க இப்போது நீங்களே வீட்டில் செய்து கொள்ளலாம். ஒன்னும் பெருசா எதுவும் தேவையில்லைங்க.

  1. காய்ச்சாத பால்
  2. ஏதாவது பழக்கூழ் ( பழத்தை நல்ல அரைச்சுக்க வேண்டியதுதான்)
  3. பத்து விரல்

இப்ப ஆரம்பிக்க வேண்டியதுதான்....... 




  • மசாஜ் செய்யும் போது மசாஜை மேல் நோக்கி செய்ய வேண்டும்.
  • கிளன்சின் லோசனாக பாலைப் பயண்படுத்தி கழுத்திலிருந்து முகம் வரை தடவி பின் பஞ்சைக் கொண்டு துடைத்து எடுக்க வேண்டும்.
  • பழக்கூழைக் கொண்டு கழுத்து மற்றும் முகம் முழுவதும் பூசி கழுத்திலிருந்து மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும்.
  • மசாய் செய்யும் மீது விரல்கள் ஒன்றன் பின் ஒன்றாக் சேர்ந்தாற்போல் வைத்து செய்ய வேண்டும்
  • மசாஜ் செய்யும்போது எந்த காரணத்தைக் கோண்டும் நடுவில் கையை எடுக்காமல் செய்யவேண்டும். அவ்வாறு எடுக்க நேரிட்டாலும் ஒரு கை முகத்திலேயே இருக்க வேண்டும்

  • முகம் முழுவதும் நுனி விரல்களைக் கொண்டு மெதுவாக தட்டிவிட விட வேண்டும்
  • மசாஜை கழுத்திலிருந்து ஆரம்பித்து விரல்களை மெதுவாக மேல்நோக்கி தாடைக்கு கொண்டு வரவேண்டும்
  • தாடையின் நடுப்பகுதியில்ருது பக்கவாட்டில் செய்ய வேண்டும்
  • தாடையிலிருந்து மேல்நோக்கி கன்னப்பகுதிகளில் செய்ய வேண்டும்
  • உதட்டினைச் சுற்றியும், உதட்டின் ஓரங்களிலும் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்
  • முதல் மூன்று விரல்களைக்கொண்டு சிரிப்பு வரிகளின் (Laugh Line) மீது மசாஜ் செய்ய வேண்டும்
  • கன்னத்தில் முதல் மூன்று விரல்களைக் கொண்டு கிள்ளியும் மசாஜ் செய்ய வேண்டும்.
  • மூக்கின் மேலும், மூக்கின் ஓரங்களிலும் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்
  • கண்களுக்கு நடுவில் குறுக்காக முதல் விரலைக்கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். புருவங்களையும் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். புருவங்களை பிடித்தும் விட வேண்டும்
  • நெற்றியில் முதல் இரு விரல்களைக் கொண்டு வட்டமாக மசாஜ் செய்ய வேண்டும்.
  • இவை அனைத்தையும் இரண்டு முதல் மூன்று முறை செய்ய வேண்டும்.
  • பிரஷர் பாயிண்ட்ஸ் உள்ள இடங்களில் அழுத்திவிட வேண்டும். பிரஷர் பாயிண்ட்ஸ் உள்ள இடங்கள் தாடையின் நடுப்பகுதி, மூக்கின் பக்கவாட்டு இடம், நெற்றி மேல்முடிவில், புருவங்களின் நடுவில், கண்புருவங்களின் முடிவின் சிறிது கீழ்பகுதி, மூக்குத்தண்டிற்கும், கண்களின் ஆரம்ப பகுதி ஆகும்
  • தூக்கம் வாராதவர்களுக்கு கைகளை சுண்டுவிரல்களின் பக்கமாக வைத்து நெற்றியில் மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு மசாஜ் செய்தால் நன்றாக தூக்கம் வரும். கண்பாவைகளை மெதுவாக அழுத்திவிட வேண்டும்

சைனஸ் பிரச்சனையுள்ளவர்களுகு மூக்கின் முடிவிலிருந்து கன்னப்பகுதிக்கு செல்லும் கன்ன எலும்புகளின் கீழ் நன்றாக அழுத்தி கீழ் நோக்கி தாடை வரை கொண்டு வந்துவிடவும். அவ்வாறு செய்தல் சைனஸ் பிரச்சனையிலிருந்து தற்காலிக விடுதலை கிடைக்கும்