உன்னால் முடியும்
சிட்டிகா
Saturday, 30 April 2011
நட்புக்கடல்
மேலோட்டமாக தேடினால்
மீன்கள் கிடைக்கும்
மூழ்கித் தேடினால்
முத்துக்களும் கிடைக்கும்
பணம் - உறவு
இருக்கும்போது
உறவுகள் பற்றி நம்க்கு தெரியாது
இல்லாத போது
உறவுகளுக்கு நம்மைப்பற்றி தெரியாது
பணம்
பணத்தின் மூலப்பொருள்
காகிதம் தானே !
கற்பூரம் இல்லையோ
இப்படி கரைகிறதே !!
Friday, 29 April 2011
சேமிப்பு
சேமிப்பது நல்லது தான்
சிரிப்பை அல்ல.
செலவிடுவது நல்லது தான்
கண்ணீரை அல்ல.
திருமணம்
இருவரை ஒருவராக்குவது
அந்த ஒருவர் யாரென்பது தான்
வாழ்வின் போராட்டம்.
ரோஜா வியாபாரி
ரோஜா வியாபாரியே
இவைகளை விற்றுவிட்டு
வேறென்ன வாங்கப் போகிறாய்
இதைவிட அழகாய்?
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)